பங்காளி நமக்கு எதோ நேரம் நல்லாயிருக்கு போல?.. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்.. பதைபதைப்பு வீடியோ..!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துகள் அரங்கேறி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சில விபத்துகள் கொடூரமாக நேர்ந்தாலும், அதிஷ்டத்தின் காரணமாக எளிதில் தப்பிக்கும் வாய்ப்புகளும் உள்ளது. 

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில், இரண்டு இளைஞர்கள் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் மட்டும் வைரலாகி வரும் நிலையில், இது நடைபெற்ற இடம் குறித்து தெளிவான விபரங்கள் இல்லை. இந்த வீடியோவில் பயணிகள் பேருந்து வந்து கொண்டு இருந்துள்ளது. 

இந்த பேருந்திற்கு மிக அருகில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டு இருந்த நிலையில், பேருந்து இடதுபுறமாக திருப்பியுள்ளது. இடதுபுறத்தில் வாகனம் வருவதை பேருந்தின் ஓட்டுநர் சரிவர கவனிக்கவில்லை. 

இதனையடுத்து பேருந்தை வேகமாக திருப்பவே, இரண்டு இளைஞர்களும் முன்சக்கரத்தில் சிக்கி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பேருந்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore bus two wheeler accident video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->