பவானி ஆற்றில் தத்தளித்த 51 உயிர்கள்.! டார்ச் லைட் வெளிச்சத்தில் நடந்த மீட்பு பணி..!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பகுதியில் பில்லூர் அணையானது உள்ளது. இந்த அணைக்கு நீர் வரத்து பவானி ஆற்றில் இருந்து வரும் நிலையில்., ஆயுத பூஜையின் எதிரொலியாக அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். மேலும்., மேட்டுப்பாளையம் பகுதியை சார்ந்த சுற்றுலா பயணிகளும் - மக்களும் அதிகளவு வருகை தந்திருந்தனர். 

இந்த பகுதியில்., வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பகுதியில் பம்ப் ஹவுஸ் இருக்கும் நிலையில்., இதற்கு அருகிலேயே பவானி ஆறானது இரண்டு கிளைகளாக பிரித்து செல்கிறது. இந்த இடத்தில் அங்குள்ள கோவை கவுண்டர் மில் பகுதியை சார்ந்த குடும்பத்தினர் சுமார் 51 பேர் வந்திருந்தனர். இவர்கள் வருகை தந்த சமயத்தில் ஆற்றில் நீர் குறைந்தளவு சென்றுள்ளது. 

குடும்பத்தோடு வந்திருந்தவர்கள் அனைவரும் ஒரு புறம் சமையல்., மற்றொரு புறம் ஆற்றில் ஆனந்த குளியல் என்று உற்சாகமாக இருந்த நிலையில்., பில்லூர் அணையில் இருந்து மின்தேவைக்காக நீரானது திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்றில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கவே., ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த பயணிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி அலறினர். 

இதனையடுத்து கரையில் இருந்த மக்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து., காவல் துறையினருக்கும் - மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பரிசல் மற்றும் லைப் ஜாக்கட்டுகளின் உதவியோடு., நீரில் தத்தளித்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 51 பேரை பத்திரமாக மீட்டனர்.  

இந்த சமயத்தில்., இரவும் விரைவாக வந்துவிட்டதை அடுத்து டார்ச் விளக்கின் வெளிச்சத்தில் மீட்பு பணி சுமார் நான்கு மணி நேரமாக நடந்தது. பொதுவாக அணையில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட பின்னர்., ஆற்றில் இருக்கும் உள்ளூர் மக்கள் கரைக்கு வந்துவிடுவது வழக்கம். இந்த சமயத்தில்., நேற்று ஆற்றில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் வெளியூர் நபர்கள் என்பதால்., இவர்களுக்கு எச்சரிக்கை ஒலி குறித்த விழிப்புணர்வு தெரியவில்லை. இதனை தடுப்பதற்கு அதிகாரிகள் எச்சரிக்கை நடவடிக்கை அல்லது பதாகைகள் வைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore Bhavani river struggled peoples rescued safely


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->