மகளீர் தின சிறப்பு.!! ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த கோவை இளம்பெண்.!! தாயும் சேயும் நலம்., கேக் வெட்டி கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தை சார்ந்தவர் சுரேஷ்பாபு. இவர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சிந்து (26). இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. 

சிந்து கர்ப்பமானதை தொடர்ந்து., அவரது மூன்றாவது மாதத்தில் ஸ்கேன் பரிசோதனைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சோதனை செய்தனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., அவருக்கு மூன்று கருக்கள் இருப்பதை கண்டறிந்தனர். 

மூன்று கருக்கள் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் சிந்துவுக்கு தேவையான சத்து மாத்திரைகள் வழங்கி., உணவு சாப்பிடும் முறை குறித்தும் பிற ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும்., உரிய மாதத்தில் சோதனைக்கு வந்து செல்லவும் அறிவுறுத்தினார். 

நாட்கள் கடந்து செல்ல நிறை மாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 2 ம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு., நால்வர் கொண்ட மருத்துவ குழுவின் உதவியுடன் நேற்று அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியெடுத்தனர். 

அதன்படி நேற்று காலை சுமார் 9.23 மணியளவில் மூன்று அழகான பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் சுமார் ஒன்றே முக்கால் எடையும்., ஒரு குழந்தை ஒன்றரை கிலோ எடையும் கொண்டு இருந்தது. மேலும்., இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மகளீர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்ததை அடுத்து., மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர்.  
இந்த நிகழ்ச்சியானது அந்த பகுதியில் பெரும் இன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

in Coimbatore a lady delivery her 3 cute babies by sugary


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal