அரசு அதிகாரியின் சுயலாபத்திற்காக தண்ணீர் இன்றி தவிக்கும் 3 ஆயிரம் குடும்பங்கள்.. சென்னையில் அரங்கேறும் அவலம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் மக்கள்  தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கிராமங்களை நோக்கி சென்னை மக்கள் படை எடுக்கின்றனர். 

தண்ணீர் பிச்சனையால் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாதது மற்றும் பெய்த மழையை சேமித்து வைக்காதுதான்.

இது மட்டுமில்லாமல் விளைநிலங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரை உறிஞ்சி விற்கும் தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்களால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. இதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் உள்ள தண்ணீர் விற்பனை நிறுவனங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரத்திற்கு உட்பட்ட மாங்காடு ஊராட்சியில் உள்ள வசந்தபுரம் பகுதியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்துவருகின்றனர். அப்பகுதியில் 3000 குடும்பங்கள் உள்ளது. அங்குள்ள கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துவிட்டது. குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் விற்பனை நிலையத்தை முற்றிகையிட்டனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் காவல் துறையில் பணிபுரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இவரிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அவர் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆகையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த தண்ணீர் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 


மேலும், அந்த தண்ணீர் நிறுவனத்துக்கு செல்லும் பாதை அப்பகுதி மக்கள் கல் மற்றும் கட்டைகளை கொண்டு மூடினார். மேலும் தொடர்ந்து தண்ணீர் எடுத்தால் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணுவதற்கு பேச சென்ற பொதுமக்களிடம் அதிகார தோணியில் மிரட்டி பேசும் காணொளி காட்சிகள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. 




இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai water company filled land water to sell cost peoples angry and fighting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->