டிக் டாக்கில் குத்தாட்டம்.. நேரில் வழிப்பறி... போதை வாழ்க்கை... 7 புள்ளிங்கோ பகீர் வாக்குமூலம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று வழிப்பறி செய்வது, இந்த பணத்தை வைத்து போதை மாத்திரை வாங்கிக்கொண்டு உல்லாசமாக சுற்றித்திரிவது போன்ற செயலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் டிக் டாக் வீடியோ செய்து கொண்டு இருந்த 7 புள்ளிங்கோவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சார்ந்த புள்ளிங்கோ கூட்டத்தில் 3 பேர் 18 வயது கூட ஆகாத சிறுவர்களாக இருந்து வரும் நிலையில்., மீன்கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் இரவு வேலையில் வாகனத்தில் கிளம்பி பிரதானமாக உள்ள சாலையில் தனியாக நடந்து செல்லும் வயதான நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

அலைபேசி., நகை., பணம்., வாகனம் என்று கிடைக்கும் பொருட்களை பறித்துக்கொண்டு., போதை மாத்திரை விற்பனை செய்யும் ஆசாமியிடம் கொடுத்து போதையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த கும்பல் கடந்த ஒரு வருடமாக காவல்துறையினரின் கண்களுக்கு மண்ணை தூவி செயல்பட்டு வந்துள்ளனர். 

இந்த தருணத்தில்., கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக நுங்கம்பாக்கம் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அடித்து உதைத்து பணம் மற்றும் நகைகளை பறித்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த சிலமணி நேரத்திற்கு உள்ளகாவே., பாண்டிபஜாரில் இதனைப்போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதாக தி.நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

பின்னர் இது தொடர்பாக கண்காணிப்பு காமிராவை சோதனை செய்த காவல் துறையினர்., இரண்டு இடத்திலும் நடைபெற்ற குற்றத்தில் ஒரே கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக தனிப்படை அமைத்ததில் புளியந்தோப்பு பகுதியை சார்ந்த நபர்கள், திருப்பத்தூரில் உள்ள ஏலகிரி மலைக்கு சென்று விட்டு வரும் போது 7 பேரையும் கூண்டோடு தூக்கி சென்றுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனம், 20 கிராம் தங்கம், 12 அலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும்., இவர்களுக்கு மாத்திரை கொடுத்த கொடூரனையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும்., இவர்கள் அனைவரும் 15 க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவம் மற்றும் வீடுபுகுந்து கொள்ளையடித்த குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai tic tok pullingo robbery police arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->