அலைபேசி டவர் ரேடியேஷன் ஆபத்து... உஷார்படுத்தப்பட்ட விடுதிகள்.. சென்னையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரில் உள்ள அண்ணாநகர் மற்றும் ஓ.எம்.ஆர் பகுதியில் இருக்கும் பெண்கள் விடுதியினை குறிவைத்து அலைபேசி திருட்டில் மர்ம நபர் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும், சம்பந்தப்பட்ட விடுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு காமிரா காட்சியில், தலைக்கவசம் அணிந்த மர்ம நபரொருவர் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. விடுதியில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட போது, பெண்களில் பலரும் பல நேரத்தில் பணிகளுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர். 

இதனால் பெரும்பாலும் அறையில் வெவ்வேறு பகுதியை சார்ந்த நபர்கள் தங்கிய பின்னர் சக தோழிகளுடன் பழகி வரும் நிலையில், இவர்களின் பணிசூழல் காரணமாக அரை எந்த நேரத்திலும் திறந்து இருக்கும். இவ்வாறான பரபரப்பு நேரத்தில் வருகை தரும் மர்ம நபர், தனியார் அலைபேசி தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், இப்பகுதியில் இருக்கும் டவரில் அதிக கதிர்வீச்சு சோதனை செய்ய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், தனது கைகளில் இருக்கும் இயந்திரத்தின் மூலமாக டவர் அதிக கதிர்வீச்சை வெளியீடு செய்வதாகவும் கூறி பயத்தினை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அதிக கதிர்வீச்சு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றும் கூறி பின்னர் அலைபேசி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக யாரேனும் வந்து விசாரித்தால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விடுதிக்கு இரகசிய தகவல் விடுக்கப்பட்டு இருந்தது. 

இந்த நேரத்தில், நொளம்பூர் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மர்ம நபரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணையில், 

அலைபேசியை திருடி வந்த நபர் தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்த பாலாஜி என்பதும், இது போன்ற பெண்கள் விடுதிக்கு சென்று பீதியை கிளப்பி அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. திருடிய அலைபேசியை பல்லாவரத்தை சார்ந்த ராகுல் என்பவனிடம் விற்பனை செய்து ஸ்டார் ஹோட்டலில் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர். 

தற்போது பாலாஜி மற்றும் ராகுலிடம் இருந்து 34 அலைபேசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேலும் பல விபரத்தை சேகரித்து கொண்டு வருகின்றனர். மேலும், அபாயம் கதிர்வீச்சு என்று கூறி பெண்கள் விடுதியில் இருந்த அலைபேசி மற்றும் மடிக்கணினியை திட்டமிட்டு திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai thief gang arrest by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->