ஆலோசனை கூட்டத்திற்கு வந்த இரயில்வே ஊழியருக்கு நேர்ந்த சோகம்.. அஜாக்கிரதையால் அரங்கேறிய பெரும் துயரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள பெரம்பூரில் இரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பாக மூன்று நாட்கள் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பல மாவட்டங்களில் இருந்து இரயில்வே பணியாளர்கள் வருகை தந்திருந்தனர். 

இந்த கூட்டம் மூன்று நாட்கள் நடந்த நிலையில்., இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் அவரவரின் சொந்த மாவட்டத்திற்கு செல்லும் வகையில் சிறப்பு இரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

chennai rail accident died,

இந்த இரயிலில் பயணம் செய்ய அனைவரும் இரயிலில் ஏறிக்கொண்டு இருந்த நிலையில்., இக்கூட்டத்திற்கு வந்திருந்த ஊழியர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த சமயத்தில் இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து இது குறித்து இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றினர். 

இது குறித்த விசாரணை மேற்கொண்ட போது., ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் பகுதியை சார்ந்த சிவகுமார் என்பதும்., இவர் திருப்பூரில் உள்ள இரயில் நிலையத்தில் மின்துறை உதவியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. 

chennai rail accident died,

இவர் சென்னை கொரட்டூரில் உள்ள இரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் இடையே கடக்க முயன்ற போது., எம்.ஜி.ஆர். இரயில் நிலையத்தில் (சென்னை சென்ட்ரல்) இருந்து பெங்களூர் புறப்பட்டு சென்ற அதிவிரைவு வண்டி மோதி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 

இவரின் உடலை ஸ்டாண்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai railway employee died unsafely cross railway line


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->