காவல் ஆய்வாளரை தாக்கிய கைப்பிள்ளைகள்.. கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்களை முறித்துக்கொண்ட பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை அருகே நேற்று இரவு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் திடீர் போராட்டத்தில் வருகின்றனர். வெகு நாட்களாக போராட்டத்தில் இருந்த அவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து பெண்கள் உட்பட ஏராளமானோர் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்பொழுது, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியும் அவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், தற்போது வரையிலும் போராட்டம் நீண்டு கொண்டுதான் இருக்கிறது. இதைதொடர்ந்து திருவல்லிக்கேணி, பாரிமுனை, பிராட்வே, கிண்டி, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

போராட்டம் நடைபெறும் பகுதியில் காவல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணியில் காவல் ஆய்வாளரை முகமது ஷைபுல்லா, ரஹீம் ஆகியோர் தாக்கியுள்ளனர். இவர்களை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், இவர்கள் காவல் நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்ற போது கால் இடறி விழுந்ததில் இருவருக்கும் கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்களை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதி செய்து, தேவையான சிகிச்சையை அளிக்க உதவி செய்துள்ளனர். இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In chennai police attacked by culprit, now he fall down in toilet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->