சென்னையில் கைதான கஞ்சா விற்பனை கும்பலின்., பேரதிர்ச்சி வாக்குமூலம்..!! சீரழியும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், ஐ.டி பணியாளர்கள்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

சென்னையில் உள்ள திருவேலிக்கேணி பகுதியில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேற்கொண்ட விசாரணையில்., மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை சார்ந்த சிங்கராஜ் என்பவன்., அடையார் பகுதியில் தனியாக வீடு எடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும்., ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து சிங்கராஜை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., சிறிய அளவிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்., சிங்கராஜிடம் சுமார் 1400 வாடிக்கையாளர்கள் அவ்வப்போது கஞ்சா வாங்கி வருவதும்., இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மற்றும் கல்லூரியை சார்ந்தவர்கள் என்றும்., சிலர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் என்பதும் தெரியவந்தது. 

kanja, கஞ்சா,

இதனைப்போன்று கோயம்பேடு மதுரவாயல் பகுதியில் வசித்து வந்த பாண்டி மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரை சார்ந்த பிரியலட்சுமி., தேனாம்பேட்டை பகுதியை சார்ந்த சுப்பிரமணி ஆகியோரும் அங்கிருந்து கஞ்சா விற்பனை செய்து வருவதும்., சிங்கராஜின் அறையில் இருந்து 4 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. 

சிங்கராஜின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பாண்டி., செல்வம்., துரை மற்றும் வரதராஜை கைது செய்து., அவர்களிடம் இருந்த 36 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவினை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து பிரியலட்சுமி மற்றும் சுப்பிரமணி., சூர்யபிரகாஷ் மற்றும் சூர்யாவை கைது செய்த நிலையில்., சென்னையில் நான்கு நாட்களில் 50 கிலோ கஞ்சா விற்பனை செய்துவிடலாம் என்ற அதிர்ச்சி தகவலையும் தந்துள்ளனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai police arrest kanja gang investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->