அவசர கால பயணம்.. 5000 பேர் விண்ணப்பம்.. பணியை துவக்கிய காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மக்கள் தமிழகத்தின் பிற மாநிலங்களுக்கு செல்ல காவல் துறையினரின் அனுமதியை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதன்படி காவல் துறை அதிகாரிகள் சார்பாக, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காக பிரத்தியேக கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது. 

இதன் மூலமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் நபர்களின் அவசர தேவையை பொறுத்து அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது வரை சுமார் 5 ஆயிரம் பேர் இணையத்தளம் மூலமாகவும், அவசர எண்ணை தொடர்பு கொண்டும் விபரத்தை தெரியப்படுத்தியுள்ளனர். 

இந்த விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு அவசியம் என்று தெரியவரும் பட்சத்திலேயே ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், குறித்த நபரின் பயண விபரம் மற்றும் வாகனம் குறித்த தகவலும் சேகரித்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai people 5000 members want going out of city


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->