குறைந்தது வெங்காயத்தின் விலை.. கண்ணீரை ஏற்படுத்திய முருங்கை விலை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர். தமிழகத்தில் பெரும்பாலான உணவுகளில் வெங்காயம் சேர்க்கப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்தியாவில் உள்ள கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக., வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்., விளைச்சலின் போதே வெங்காயத்தின் வரத்து குறைந்து கொண்டே சென்றது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோயம்பேடு சந்தையில் பல்லாரி வெங்காயத்தின் விலை ரூ.100 க்கும்., சிறிய வெங்காயத்தின் விலை ரூ.120 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்., சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.160 க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் வெங்காயத்தின் விலை மொத்தமாக அதிகரித்தது.

murugaikai, drumstick,

இந்த நிலையில்., இன்று வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் ரூ.40 வரை அதிரடியாக குறைந்துள்ளது. சாம்பார் வெங்காயம் ரூ.160 வரையிலும்., பல்லாரி ரூ.160 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்காயத்தின் விலையானது தற்போது குறைந்துள்ளது. 

இதனைப்போன்று முருகைக்காயின் விலை கிலோ ரூ.380 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்., முருங்கைக்காயின் விலை அதிகமாக இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai onion rate low after long days


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->