கிணற்றில் நடந்தது இதுதான்...! கிணற்றுக்குள் காதலி விழுந்து பலியான சம்பவத்தில் காதலன் கண்ணீர் பதில்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னை ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் ஜீவன் நகர் பகுதியை சார்ந்தவர் தாஸ். இவரது மகன் பெயர் அப்பு (வயது 24). இதே பகுதியில் உள்ள காந்திநகர் பகுதியை சார்ந்தவர் தாமஸ். இவரது மகளின் பெயர் மெர்சி (வயது 22). இவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்து வரும் நிலையில்., அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். குடும்ப உறவினர்களான இவர்கள் அப்பு மற்றும் மேரிசிக்கு திருமணம் செய்ய முடிவு செய்ததை அடுத்து., கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணத்திற்கான நிச்சயமும் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இவர்கள் ஜனவரி மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவும் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்., நேற்று பணியை முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். 

இவர்கள் வரும் வழியில் முத்தாப்பேட்டை விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றில் சென்று இருவரும் தங்களின் அலைபேசியில் செல்பியை எடுத்துக்கொண்டு இருந்தனர்.  இந்த சமயத்தில்., கிணற்றின் சுவரந்து தீடீரென இடிந்து விழுந்து., மெர்சியும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பு., நீச்சல் தெரியாத நிலையிலும் மனைவியை காக்க கிணற்றுக்குள் குதித்துள்ளார். விதியின் சூழ்ச்சியில் மெர்சி நீருக்குள் செல்லவே., அப்புவால் மெர்சியை காப்பாற்ற இயலவில்லை. இதனையடுத்து கிணற்றின் படிக்கட்டை பிடித்து கூச்சலிட்டதை அடுத்து., இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி வந்துள்ளார். அவருக்கும் நீச்சல் தெரியாது என்ற காரணத்தால் நீளமான கம்பின் உதவியோடு அப்புவை மீட்ட நிலையில்., இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மெர்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்புவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவலானது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில்., மெர்ஸியின் இறப்பிற்கு செல்ஃபீ காரணம் இல்லை என்று அப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது., திருமண தேதி குறிக்கப்பட்ட நிச்சயம் முடிந்த பின்னர்., என்னிடம் கணவர் என்று உரிமையாக பழகி வந்த தருணத்தில்., மெர்சி கடந்த 4 ஆம் தேதியன்று வீட்டிற்கு வருகை தந்திருந்தார். பின்னர் என்னை வெளியே கூட்டிக்கொண்டு போக சொல்லியதால்., எனது இரு சக்கர வாகனத்தில் நாங்கள் இருவரும் புறப்பட்டு சென்றோம். 

அங்குள்ள நெமிலிசேரி நெடுஞ்சாலையில் சென்ற போது வயலில் சென்று புகைப்படம் எடுக்க கூறியதால்., கண்டிகைக்கு அருகேயுள்ள வயலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டு., பின்னர் வயலில் இருந்த கிணற்றுக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்த சமயத்தில்., கிணற்றுக்கு உள்ளே சென்று தண்ணீரை காலால் தொட ஆசைப்பட்டு உள்ளே செல்ல அழைத்தாள்.. எனக்கு நீச்சல் தெரியாது என்று கூறிய பட்சத்திலும்., இதனை கூட செய்ய மாட்டியா? நீரை தொட தானே கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு., என்னை பார்த்தபடியே கிணற்றுக்குள் இறங்கிய சமயத்தில்., கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தாள்..

இவளை காப்பாற்றும் பொருட்டு நானும் உள்ளே குதித்த நிலையில்., அவளை என்னால் காப்பாற்றவும் இயலவில்லை.. தண்ணீருக்கு மேலே நான் வந்த சமயத்தில் ஒரு தாத்தா என்னை பார்த்து பதறிக்கொண்டு இருந்த சமயத்தில்., விஷயத்தை கூறினேன்... அவர் எனக்கும் நீச்சல் தெரியாது என்று தெரிவித்ததை அடுத்து., நான் மயங்கிவிட்டேன். பின்னர் என்னை டியூப் போட்டு காப்பாற்றினார். பின்னர் நான் மயங்கிவிட்டேன்.. நாங்கள் செல்ஃபீ எடுக்க சென்ற போது துயரம் நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.. உண்மையில் நடந்தது இதுதான் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai love girl died in well crying report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->