3 நாட்கள் அமைதியாக இருந்த சாலைகள்.. அதிகாலையில் இருந்து அலறும் சென்னை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சொந்த ஊர்களில் சென்று கொண்டாடுவதற்கு கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சுமார் 5 நாட்களுக்கு தமிழகம் முழுவதிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. 

இந்த பேருந்துகளின் மூலமாக சென்னையில் இருந்து 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தவிர்த்து இரயில், விமானம் மற்றும் கார் போன்ற பயணத்தின் மூலமாகவும் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றுள்ளனர். 

நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு மக்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், சென்னையில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு எதுவாக தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இதனால் பேருந்து நிலையங்கள் மற்றும் இரயில் நிலையத்தில் மக்களின் கூட்டமானது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இன்று மற்றும் நாளை இந்த கூட்டம் மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் காரணத்தால் முக்கிய ஊர்களில் இருந்து 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

இதனைத்தொடர்ந்து சென்னையில் போக்குவரத்து பாதிப்புகள் அதிகமாகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மீண்டும் சென்னையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக சென்னையில் மிதமான போக்குவரத்துக்கு இருந்த நிலையில், இன்று காலையே போக்குவரத்து நெரிசல் துவங்கியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai heavy traffic


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->