தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த பெண் துடிதுடித்து உயிரிழப்பு.. மருத்துவமனை அலட்சியத்தால் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகளின் பெயர் சங்கீதா (வயது 22). இவர் தொண்டை வழியால் அவதியுற்று வந்த நிலையில், கடந்த மாதம்  தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தீபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில், கடந்த மாதத்தின் 20 ஆம் தேதியன்று அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், சிகிச்சை நடைபெற்று முடிந்த அரைமணிநேரத்திற்குள் சங்கீதா இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதன்பின்னர் கடந்த 21 ஆம் தேதியன்று மீண்டும் இரத்த வாந்தி எடுத்தவர் 21 ஆம் தேதியன்று சுயநினைவை இழந்துள்ளார். 

இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்த சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இவ்வாறு நடந்தாக தெரியவந்து, உறவினர்கள் பிரச்சனை செய்யவே, மருத்துவர்கள் பிரச்சனையை சரி செய்வதாக தெரிவித்துள்ளனர். நேற்று திடீரென மற்றொரு மருத்துவமனைக்கு சங்கீதாவை அழைத்து செல்ல கூறி 

இதையடுத்து கடந்த மாதம் 20-ந்தேதி அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த அரை மணிநேரத்துக்குள் சங்கீதா ரத்த வாந்தி எடுத்தார். 21-ந் தேதியும் ரத்த வாந்தி எடுத்த அவர், சுயநினைவை இழந்தார். இது குறித்து கிருஷ்ணன், டாக்டர்களிடம் கூறினார். அதற்கு அவர்கள், அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்கிறோம் என கூறியதாக தெரிகிறது.

ஆனால் நேற்று முன்தினம் சங்கீதாவை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கிருஷ்ணனிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனைவரையும் அனுப்பி வைத்துள்ளனர். காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai girl died wrong surgery police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->