காரில் சரக்கு.. போதையில் கபளீகரம்..! தொழிலதிபரா? கூட்டாளியா? சென்னையில் பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள ஐயப்பாக்கம் பச்சையப்பன் நகரில் இருக்கும் பகுதியை சார்ந்தவர் முகேஷ். இவர் தொழிலதிபராக இருந்து வரும் நிலையில்., எம்.எம்.லாஜிஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக சென்னையில் நான்கு கிளைகள் உள்ள நிலையில்., திருச்சியில் இருந்து லாரியில் வரும் பொருட்களை பார்வையிடுவதற்காக நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் வில்லிவாக்கம் ஐசிஎப் சாலையில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். 

இதனையடுத்து சாலையோரம் காரை நிறுத்திவிட்டு காரில் அமர்ந்திருந்த நிலையில்., 3 மர்ம நபர்கள் காரில் வருகை தந்து தங்களிடம் பேச வேண்டும் என்று கூறி முகேஷை காரில் ஏற்றிக்கொண்டு அவரின் விலையுயர்ந்த அலைபேசியை பறித்துக்கொண்டுள்ளனர்.பின்னர் முகேஷை கத்தியை காட்டி மிரட்டிய நிலையில். மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடை நோக்கி கார் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில்., இக்கும்பலில் இருந்த ஒருவன் தான் பிரபல ரவுடி தில் பாண்டி என்றும்., எனக்கு ரூ.30 இலட்சம் வேண்டும் என்றும் மிரட்டியுள்ளான். 

kidnapped,

இதனால் அதிர்ச்சியடைந்த முகேஷ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில்., காரில் இருந்த பீர் பாட்டிலை வைத்து முகேஷை தாக்கியுள்ளனர். இதன் காரணமாக செய்வதறியாது திகைத்த முகேஷ் காரில் இருந்து தப்பி சென்றுள்ளார். காரினை நிறுத்திய தில்பாண்டி கடத்தல் கும்பல் முகேஷை விரட்டி சென்ற நிலையில்., காவல் நிலையத்திற்கு அருகே முகேஷ் சென்றதும் கடத்தல் கும்பல் தப்பி சென்றுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். 

பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காரின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு காமிராவை வைத்து சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தில் பாண்டியின் கூட்டாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதற்கட்ட விசாரணையில் மேற்கூறிய தகவல்கள் வெளியாகியிருந்தது. 

maduravoyal, chennai maduravoyal, maduravoyal chennai images,

இது தொடர்பான விரிவான விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விசாரணையில்., தில் பாண்டி மற்றும் முகேஷ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில்., சம்பவத்தன்று மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளனர். பின்னர் தில் பாண்டி தனது கூட்டாளி பிரகாஷை காரினை இயக்க கூறியுள்ளார். 

இதன் அடிப்படையில் பிரகாஷ் காரினை ஒட்டவே., தில் பாண்டி - முகேஷ் காரில் மது அருந்தியவாறு பயணம் செய்து கொண்டு இருந்த நேரத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு காருக்குள் சரமாரியாக தாக்கிக்கொண்டு இருந்ததை அடுத்து முகேஷ் காரில் இருந்து கீழே குதிக்க முயற்சித்துள்ளார். 

இதனால் காரை இயக்கிய பிரகாஷ் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு அருகிலேயே வாகனத்தை ஓரமாக நிறுத்தவே., கீழே இறங்கிய முகேஷ் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளதாக பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும்., காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த முகேஷ் தன்னை தில் பாண்டி கடத்தி ரூ.25 இலட்சம் கேட்டு மிரட்டியதாக பொய் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாது முகேஷ் செங்குன்றம்., எண்ணூர்., எழும்பூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய காவல் நிலையங்களால் வழக்குகள் இருப்பதும்., கர்நாடக மாநிலத்தில் 3 பேரை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும்., எண்ணூர் ரவுடியான தனசேகர் என்பவனின் கூட்டாளியாக முகேஷ் இருந்து வந்ததும் தெரியவந்தது. முகேஷின் அலைபேசியில் மது போதையில் இருவரும் சல்லாபம் செய்துகொண்ட புகைப்பட காட்சிகளும் இருந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் தில் பாண்டியை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai business man fraud kidnapping information


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->