தனியார் பள்ளி எல்.கே.ஜி வகுப்பில் குழந்தையை சேர்க்க கொசுக்கடியில் பரிதவிக்கும் பெற்றோர்கள்.. செங்கல்பட்டில் அவலம்.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு ஊரப்பாக்கம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியின் எல்.கே.ஜி சேர்க்கைக்கு பெற்றோர்கள் விடிய விடிய பள்ளி வளாகத்தில் காத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் அருகேயுள்ள கிளம்பாக்கம் பகுதியில் ஸ்ரீ சங்கரா வித்யாலயா செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு வரை பயில வசதியாக உள்ள மேல்நிலைப்பள்ளியாகும். 

இந்த பள்ளியில் வருகிற கல்வியாண்டிற்கான மாணவர்களின் சேர்க்கை கடிதம் பிப்ரவரி 11 ஆம் தேதியான இன்று காலை 9 மணி முதலாக பெறப்படும் என்று பள்ளி நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், முதலாவதாக வரும் 80 பேருக்கு மட்டுமே சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் நேற்று மாலையிலேயே வருகை தந்து, இரவில் அங்கேயே படுத்து உறங்கியுள்ளனர்.

மொத்தமாக சுமார் 200 பெற்றோர்கள் வந்த நிலையில், தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பள்ளியின் வாசலிலேயே வரிசையாக படுத்து உறங்கியுள்ளனர். இந்த விஷயம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், எத்தனையோ அரசு பள்ளி இருக்கும் நிலையில், இன்னும் அரசு பள்ளியின் தரத்தை காரணம் காட்டி தனியாருக்கு செல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chengalpattu parents waiting for admission with mosquito byte school campus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->