காவல் துறையினருக்கு பயந்து ஓட்டம்.. நடு ரோட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட்ட வாலிபர்.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 2,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 62 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க நாடுதழுவிய ஊரடங்கு அமலாகியுள்ளது. 

இதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை தவிர்த்து வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், ஊரடங்கை மீறி சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டமாக செல்லும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோதாவரி லாலாரஜபதிராய் பேட் பகுதியை சார்ந்தவர் விரஞ்சினியிலு. 

நேற்று ஊரடங்கை மீறி செயல்பட்டு வந்த சாலையோர உணவகத்தில் நேற்று உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கவே, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் எதற்ச்சையாக அங்கு வந்துள்ளனர். 

காவல் துறையினரிடம் யாருக்கும் சிக்க கூடாது என்று கூறி அங்கிருந்த அனைவரும் வேகமாக ஓடவே, விரஞ்சனியிலு சிறிது தூரம் ஓடி நெஞ்சு வலி ஏற்பட்டு சாலையிலேயே பரிதாபமாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Andra pradesh youngster died running police fear by heart attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->