முதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்.? டெல்லியில் அரங்கேறிய சர்ச்சை.!!  - Seithipunal
Seithipunal


முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். 

அங்கு அவரை மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். 

ஆனால், தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் இருக்கும் ஒற்றை எம் பி துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் முதல்வரை வரவேற்க வரவில்லை. இதனை முதல்வரும் கவனித்தார். 

இந்நிலையில், அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், வரவேற்றவர்களை குறிப்பிட்டது பதிவிட்டுருந்தார். மக்களவை கூட்டங்கள் நடைபெறவில்லை என்றாலும், முதல்வர் டெல்லி சென்றால் தமிழக எம்பிக்கள் வரவேற்பது வழக்கம். ஆனால், ரவீந்திரநாத்குமார் இப்படி முதல்வரை வரவேற்க செல்லாமல் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஏற்கனவே, அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை இருக்கும் நிலையில், இது இன்னும் பிரச்சனையை பெரிதாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

if ops son insults eps?


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal