மிளகாயை தாக்குகிறதா கொரோனா வைரஸ்..?! பீதியில் தமிழக மக்கள்.!  - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியூரை அடுத்துள்ள லிங்கத்தூர், உப்பிடாமங்கலம், ஜெகதாபி போன்ற பல்வேறு பகுதிகளில் மிளகாய் சாகுபடியானது அதிகளவு நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், இப்பகுதியில் கடந்த சில வாரமாக வினோதமான பூச்சிகளின் தாக்கத்தால் மிளகாய் சாகுபடி சேதமாகிறது. மேலும், மிளகாயை தாக்கும் பூச்சிகள் பேன் போன்ற வகையில் உள்ளது. இதனால் மிளகாய் சேதமாவதோடு மட்டுமல்லாது, இனிவரும் காலங்களில் விவசாயம் செய்ய இயலாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.  

இப்பகுதியை சார்ந்த இயற்கை விவசாயியான முருகேசன் என்பவர், இவரது தோட்டத்தில் நாட்டு இரக மிளகாய்களை பயிரிட்டிருந்த நிலையில், விரைவில் சாகுபடி செய்து விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். இந்த நேரத்தில், பூச்சி என்று தெரியாத அளவுள்ள புழுக்கள் மிளகாயை சேதப்படுத்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். 

மேலும், மூன்று முறை பஞ்ச காவ்யம் அடித்தும் புழுக்கள் இறக்காமல் இருந்துள்ளது. புழுக்களின் இனப்பெருக்கம் தொடர்ந்து அடித்து வரும் நிலையில், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தும் பலனில்லாது போயுள்ளது. வேளாண் துறையினை சார்ந்த அதிகாரிகளும் இதற்கு மருந்து கண்டறியாது உள்ளனர். 

மிளகாயை கடித்தால் பொதுவாக மனிதனின் கண்களில் இருந்து கண்ணீர் வரும் என்ற நிலை மலையேறி, மிளகாய்களை ஐஸ்க்ரீம் போல சாப்பிடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க, சிலர் மிளகாயை கொரோனா தாக்கி விட்டது என்று வதந்தியை கிளப்பி மக்களை பீதியடைய செய்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If corona attack chilly


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->