பணம் எடுக்க ஏ.டி.எம். தேவையே இல்லை.. இனி நீங்க 'ATM Card' இல்லாமலே பணம் எடுக்கலாம்...!!  - Seithipunal
Seithipunal


டெபிட் கார்டை உபயோகிக்காமல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களிலிருந்து பணம் எடுக்கும் வசதியை அவர்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்று ICICI வங்கி தெரிவித்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி  ஏ.டி.எம்.களில் அவர்களது வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு பயன்படுத்தாமல் எப்படி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். 

1. ஐ.சி.ஐ.சி.ஐ. மொபைல் ஆப் imobileல் லாக்இன் செய்ய வேண்டும்.

2. அடுத்து  சர்வீசஸ் & கேஷ் வித்டிராவல் @ ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் ஏ.டி.எம். என்பதை தேர்வு  செய்யவும்.  

3. தேவையான பணத்தை குறிப்பிட வேண்டும், வங்கி கணக்கு எண்ணை தேர்வு செய்ய வேண்டும். நான்கு டிஜிட் தற்காலிக பின் உருவாக்கி சமர்ப்பிக்க  வேண்டும்.

4. உடனே உங்க போனுக்கு ஓ.டி.பி. ஒன்று வரும்.

5 அதன் பிறகு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.க்கு சென்று ஏ.டி.எம்.ல் cardless கேஷ் வித்டிராவல் தேர்வு செய்ய வேண்டும். 

6. உங்க மொபைல் எண்ணை அதில் குறிப்பிட வேண்டும்.

7. அடுத்த மொபைலுக்கு வந்த ஓ.டி.பி. குறிப்பிட வேண்டும்

8. தற்காலிக பின் நம்பரையும் குறிப்பிட வேண்டும்.

9.  அடுத்து எடுக்க இருக்கும் பணத்தை குறிப்பிட வேண்டும். பின் ஏ.டி.எம்.லிருந்து வரும் பணத்தை எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

10. பணம் எடுப்பதற்கான கோரிக்கை மற்றும் ஓ.டி.பி. அடுத்த நாள் நள்ளிரவு வரை செல்லுபடியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icici bank launch card less cash withdrawal facilities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->