புதிய அறிவிப்பால் அழிவை நெருங்கும் தமிழகம்.! அதிர்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்காக ஓஏஎல்பி-2 பிரிவு மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம்(டிஜிஎச்) கடந்த ஜனவரியில் ஏலம் விட்டது. இதில் குஜராத், ஒடிஸா, ஆந்திரா, அந்தமான், ராஜஸ்தான் மற்றும் தமிழகம் உள்ளிட்ட  14 மாநிலங்களில் இடம் பெற்றிருந்தன. இதற்கு அடுத்த மதம் ஓஏஎல்பி-3 பிரிவில் நாடு முழுவதிலும் 18 பகுதிகளில் ஏலம் விடப்பட்டன. அவற்றில் தமிழகத்தில் மூன்று நிலப்பகுதிகள் இடம்பெற்றன. இந்த இரண்டு ஏலங்களின் தொகை முடிவு செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிட்டுள்ளது.

ஒஏஎல்பி-2-ல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்காரவாசல் தொடங்கி வேளாங்கண்ணி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கரியாப்பட் டிணம் என 474.19 சதுர கிலோ மீட்டர் பரப்பில்  நிலப்பகுதிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கான ஏலஅனுமதி உரிமம்  மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஒ.சி) நிறுவனத்திடம்  உள்ளது. ஓஏஎல்பி-3-ல் நாகப் பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களும் புதுச்சேரி, காரைக்காலிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 459.83 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பும். புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அம்மாவட்டத்தின் திருநள்ளாறு ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1401 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியில் ஆர் எஸ் மங்களம், தேவிபட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி களில் ஹைட்ரோகார்பன் எடுக்கப் அனுமதி கிடைத்துள்ளது.

தமிழகத்தில்  ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியை தொடங்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் சேர்த்து 25 வகையான உரிமங்களை பெறுவதற்கான மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் வருவதால் அந்த மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hydrocarbon project in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->