மனைவியின் தங்கை குளிப்பதை வீடியோ எடுத்த கணவன்.. சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


சென்னை வளசரவாக்கத்தில் சேர்ந்தவர் தினேஷ் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 9 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தினேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு தினேஷ் மனைவி சென்றுள்ளார். 

இந்நிலையில் தினேஷ் மனைவியின் தங்கை, தினேஷ் வீட்டுக்கு வந்த சமயத்தில் அவர் குளிக்கும் போது அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். தினேஷ் இந்த வீடியோவை மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பி என் மனைவி என்னுடன் வாழ வில்லை என்றால், அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband take wife sister photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->