கள்ளக்காதல்.. ஏரியா பகை.. முன்விரோதத்தால் அதிரவைக்கும் விபரீத நிகழ்வு..!  - Seithipunal
Seithipunal


வேறொரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்த கணவனை மனைவி பிரிந்து சென்ற நிலையில், முன்விரோதம் காரணமாக கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கு கோடீஸ்வரன் என்ற 30 வயது மகன் பெயிண்டர் ஆக வேலை செய்து வந்தார். ஓராண்டுக்கு முன்பு ராக்கம்மாள் என்பவருடன்கோடீஸ்வரனுக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால், கோடிஸ்வரன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், ராக்கம்மாள் கணவரை பிரிந்து சென்றுள்ளார்.

புதுகிராமம் சிந்தாமணி நகரில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அங்கிருந்த வீட்டை காலி செய்துவிட்டு ராமகிருஷ்ணன் பாரதி நகரில் குடியேறி இருக்கின்றார். அப்பொழுது ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியில் வசித்து வந்த சூர்யா ஆகியோர் தங்களுடைய பகுதிக்குள் வரக்கூடாது என்று கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சூர்யா மற்றும் ராமகிருஷ்ணன் தகராறு செய்ய இருவர் மீதும் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. 

சூர்யா மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், காவல்துறையினr அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். ராமகிருஷ்ணன் ஜாமீனில் வெளிவந்துள்ளார். கோடீஸ்வரனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பழிவாங்க நினைத்த ராமகிருஷ்ணன் தனது நண்பர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். 

நேற்று மாலை கோடிஸ்வரன் தனியாக பைக்கில் செல்வதை கண்ட ராமகிருஷ்ணன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து எங்களுடைய ஏரியாவிற்கு வரக்கூடாது என்று நீ எப்படிச் சொல்லலாம் என கோடீஸ்வரன் இடம் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர். தப்பியோடிய 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed who ignore his wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->