பசி, பட்டினி - இலங்கையில் 60 லட்சம் பேர் அவதி., வெளியான அதிர்ச்சி ரிபோர்ட்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் நிலவிவரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திடீரென உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடுமையான அவதி நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளதாவது,

"இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 லட்சம் பேர் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக  உணவுப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இலங்கை மக்களின் உணவுத்தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய போதிய நிதியாதாரங்கள் தேவைப்படுகிறது.
இலங்கையில் 4ல் ஒருவர் தங்களது உணவின் அளவைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிவரையிலான காலம் வரை இலங்கையில் உணவுச் சிக்கலைத் தீர்க்க 6.3 கோடி அமெரிக்க டாலர்கள் உடனடியாக தேவைப்படுகிறது". இன்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hunger 60 lakh people suffer in Sri LankaShocking report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->