இபாஸ் விவகாரத்தில் தலையிட்ட மனித உரிமை ஆணையம்.! ரத்தாகிறதா இபாஸ்? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வண்ணம் உள்ளது. சென்னையை தொடர்ந்து தற்போது பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கிற்கு பிறகு சென்னையில் கொரோனாவின் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 5,880 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6,488 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 119 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,690 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

மேலும், இபாஸ் வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என உத்தரவிட்டது.

இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் மனித உரிமை ஆணையத்திற்கு புகார் மனுவை கொடுத்துள்ளார், அதில்,  இ-பாஸ் நடைமுறையால் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், மேலும், அரசு ஏற்படுத்தி கொடுத்த இபாஸ் முறை ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. பல இடங்களில் இபாஸ் காரணமே இல்லாமல் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான உரிய காரணத்தை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. இதனால் தங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்வதற்கு கூடமுடியவில்லை, அதனால் இத்திட்டம் தனிமனித உரிமையை பறிக்கும் இருப்பதனால் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனிடையே, மனுவை ஏற்று கொண்ட மனித உரிமை ஆணையம் இ பாஸ் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

human rights commission notice tn government


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->