ஒரே நேரத்தில் விளக்குகளை போடும்போது மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா?! எச். ராஜா விளக்கம்!! - Seithipunal
Seithipunal


ந்திய நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். இந்த நிலையில் மக்களிடம் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அணை இன்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்து அனைவரும் அகல் விளக்குகள், டார்ச் லைட்டுகள், செல்போன் லைட்டுகள் போன்றவற்றின் மூலம் வெளிச்சம் வர செய்ய  வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த நிலையில் குறிப்பிட்ட நேரமான இரவு 9 மணிக்கு ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் மின் விளக்குகளை அனைத்து விட்டு பின்பு மீண்டும் ஒரே நேரத்தில் விளக்குகளை போடும் போது மின்சார சாதனத்தில் பிரச்சினை ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரவு 9 மணி வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து பின்னர் 9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படலாம் என்று கூறுபவர்களுக்கு இந்த தகவல் என்று கூறி மொத்தம் இந்நிகழ்வில் வீட்டு உபயோகம் 20% பிரதமர் பிரிட்ஜ் ஏசி போன்றவற்றை நிறுத்த சொல்லவில்லை மின்விளக்குகளை நுகர்வு வெறும் 3% தான் இதனால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H.Raja tweet about lighting at 9 pm 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->