ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. பழமொழியை உண்மையாக்கிய எச்.ராஜா.!  - Seithipunal
Seithipunal


திமுக எம்எல்ஏ குக.செல்வம் பாஜகவில் இணைந்த நிலையில், திமுகவில் பல்வேறு உட்கட்சிப் பூசல்கள் இருப்பது அம்பலமாகி உள்ளது. 

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக முக்கிய பிரமுகர்கள் பலரும் திமுகவை விட்டு விலகிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வத்தை தொடர்ந்து மேலும் சில திமுக நிர்வாகிகளும் பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகளில் சேர இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், திமுக வாரிசு அரசியலில் இருந்து தற்போது குடும்ப அரசியல் ஆக மாறிவிட்டது என்று செல்வம் குற்றம்சாட்டி இருந்தது சர்ச்சையை கிளப்பியது. மேலும், திமுகவில் திறமையானவர்களுக்கு மதிப்பில்லை என்றும்., பணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் சீனியர்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் அறிவாலய வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

இந்நிலையில், இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,"ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.க. செல்வம் அவர்களின் கருத்து தமிழக மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அவரை இடைநீக்கம் செய்த திமுக கோட்டையில் குத்து வெட்டு துவக்கம். நல்லது இன்றே துவங்குவது சிறப்பு" என்று தெரிவித்துள்ளார். 

செல்வம் வெளியேறியது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று திமுகவினர் கூறி வருகின்றனர். இருப்பினும், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி பிரமுகர்கள் இப்படி பல்வேறு கட்சிக்கு தாவுவது நல்லதல்ல என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h.raja tweet about dmk party problems 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->