முக.ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமான பள்ளியில், தமிழில் பேசினால் அபராதம்!! எச்.ராஜா பரபரப்பு சவால்!! - Seithipunal
Seithipunal


தேசிய கல்வி கொள்கையின் வரைவு திட்டம் அண்மையில் வெளியானது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், மூன்றாவுது மொழியாக இந்தி கட்டாயம் என கூறப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் " மொழி உணர்வு கலந்த தமிழர்களின் ரத்தத்தில் "இந்தி" என்ற கட்டாயக் கலப்பிடத்தை யார் வலுக்கட்டாயமாகச் செலுத்த முயன்றாலும் அதை தி.மு.கழகம் கடுமையாக எதிர்த்துப் போர் தொடுக்கும்" என ஸ்டாலின் கூறியிருந்தார்.


இதுகுறித்து எச்.ராஜா பேசுகையில் வேளச்சேரியில் முக.ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமான "சன்சைன்" எனும் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. அந்த பள்ளியில் குழந்தைகள் தமிழில் பேசினால் அபராதம் போடுகிறார்கள். மேலும், அந்த பள்ளியில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் தவிர தமிழ் ஒரு படமாக கூட இல்லை. முதலில் நீங்கள் அங்கே போர் தொடுங்கள் என எச்.ராஜா கூறியுள்ளார்.

மேலும், தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய திமுக, திக தலைவர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து, அவர்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள் தமிழ் படிக்காமல் CBSE பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கான பட்டியலை நான் தந்துவிட்டால் தி.மு.க-வும், தி.க-வும்  கட்சியை கலைத்துவிடுவார்களா?? என கேள்வியெழுப்பினார். 
 

English Summary

H.Raja talk about Stalin's school


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal