'நான் ப.சிதம்பரத்தை போல கண்ணாடி வழியாக எட்டி பார்ப்பவன் அல்ல' எச்.ராஜா கூறியதில் சிரிப்பலை!!  - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில், அமைச்சர் பாஸ்கரன் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்பி தலைமையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மானாமதுரை அதிமுக வேட்பாளர் நாகராஜன், சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். அதன்பின்னர் பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதி வேட்பாளருமான எச்.ராஜா உரையாற்றினார்.

அந்த உரையில், " பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளோம். அதேபோலவே, 8 கோடி ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம். 

ஜெயலலிதா இறந்த பின்னர் எப்படியாவது முதல்வர் ஆகிவிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த ஆசையில் இருந்தார். எப்படியாவது 18 தொகுதி இடைத்தேர்தலில் வென்று விடலாம் என இருந்த ஸ்டாலினிற்கு அதிமுக, பாமக, பாஜக கூட்டணி என்ற செய்தி கேட்டதும் நிலை தடுமாறி போய்விட்டார்.

அதிமுக ஆட்சி 2021 வரை நிச்சயம் நீடிக்கும். நான் காங்கிரசை சேர்ந்த ப.சிதம்பரம் போல் இந்தியா என்ற கண்ணாடியில் இருந்து கொண்டு சிவகங்கையையோ அல்லது சிவகங்கை என்ற கண்ணாடியில் இருந்து கொண்டு இந்தியாவையோ நிச்சயம் பார்க்கமாட்டேன். 

எப்பொழுதும் மக்களோடு மக்களாக மக்களுக்காக பணியாற்றி கொண்டிருப்பேன்" என அவர் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H.raja says about pa.chidambaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->