சசிகலாவை நேரில் சந்தித்த எச்.ராஜா மற்றும் தமிழிசை!! அரசியல் தான் காரணமா?!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரிக்கும், திருப்பூருக்கும் வருகைதரும் பிரதமர் மோடியை தனது தலைமையில், கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.

அதன்படி பிப்ரவரி 10, திருப்பூர், பெருமாநல்லூர் பாஜக சார்பில் மாநாடு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அண்ணாசிலை அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் எதிர்ப்பு போராட்டம் நடந்தது.

இந்த பரபரப்பினால், அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களின் தர்ணா போராட்டத்திற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போலீசாரை எதிர்க்கும் வகையில் மதிமுக தொண்டர் ஒருவர் மின்மாற்றியில் ஏறி போலீசாருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. 


 

மேலும், பொதுமக்களுக்கு இடையூரு ஏற்படுத்தும் வகையில் மதிமுகவினர் செயல்பட்டு வருவதாகவும், பாஜக பெண் நிர்வாகி ஒருவரை தாக்கியுள்ளதாக்கவும் தகவல்கள் வெளியாகின. அங்கு கலவரம் ஏற்படும் சூழல் காரணமாக பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். 

தாக்கப்பட்ட பாஜக பெண் நிர்வாகியான சசிகலா கதிரேசனை பாஜகவின் முக்கிய பிரமுகர்களான  H.ராஜா மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் நேரில் சென்று அவரை நலன் விசாரித்து வந்துள்ளனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது நலனை விசாரிக்க வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h.raja and tamilisai met sasikala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->