ஓசூரை போல பஞ்சாப்பிலும் கொள்ளை?.. முத்தூட் பைனான்ஸ் நிறுவன கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் வாக்குமூலம்..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில், முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பல் ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அவர்களின் கைகளை கட்டி, வாயை டேப்பால் ஒட்டி விட்டு ரூபாய் ஏழு கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது.  

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகளை அமைத்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இதன்போது, தமிழக காவல்துறையினருக்கு உதவி செய்யும் பொருட்டு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா காவல்துறையினரும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

இதனையடுத்து, இன்று ஹைதராபாத் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளை கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. 

கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி - அணைக்கல் சாலையில் கொள்ளையர்கள் லாரி மூலமாக புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும், முத்தூட் நிறுவனத்தின் மேலாளரிடம் இருந்து கைப்பற்றிய அலைபேசியில் இருந்து, கண்டெய்னர் லாரி ஓட்டுனருக்கு கொண்டது தெரியவந்தது. 

இதன்பின்னர், லாரியின் ஓட்டுநர் எண்ணை ஆய்வு செய்கையில், அது ஹைதராபாத் நகரை நோக்கி செல்வது உறுதியானது. இதனைத்தொடர்ந்து, சைபர்பாத் காவல்துறையினர் உதவியுடன் கொள்ளையர்களை தமிழக காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த கொள்ளைக் கும்பலை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 7 துப்பாக்கிகள் மற்றும் 100 தோட்டாக்கள், 20 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், இவர்கள் 7 பேரிடம் நடைபெற்ற விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்திலும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் பஞ்சாப் மாநில காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த வழக்கு தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hosur Muthoot Finance Company Robbery Case Investigation Tragedy Info Leaked


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->