பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கையா? உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய திட்டதை கொண்டுவரவேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உட்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்காவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அவர்களது கல்வியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்தநிலையில் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டுவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைக்குள் அனைவரும்  பணிக்கு திரும்ப வேண்டும்” என்று உத்தரவிட்டு இருந்தனர்.

ஆனால் ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடரும் என அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு . அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எனவே வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

highcourt announcement abour jactto geo strike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->