ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.!! - Seithipunal
Seithipunal


ஊரடங்கு உத்தரவு இருந்து சமீபத்தில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் அனைத்து மாநிலத்திலும் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் மது கடை திறந்த முதல் நாளே சுமார் 175 கோடி வருவாய் வந்ததாக தகவல் வெளியானது. இரண்டாவது நாள் 250 கோடியை தாண்டியது கூறப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை என கூறிய தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு கடந்த சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி. ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே? தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court says about tasmac


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->