ஹெல்மெட் அணிவது கட்டாயம்!! நாளை முதல் அமுலுக்கு வருகிறது!! போலீசாரின் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


கடந்த 2017-ம் ஆண்டு ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

இந்நிலையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  
 
கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 648 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 322 பேர் ஹெல்மெட் அணியாததால்  உயிரிழந்துள்ளனர். எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. 

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதலில் ரூ.100 அபராதம் விதிப்போம் அல்லது அதற்கான ரசீது கொடுப்போம். 3-வது முறை ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும். 

காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் அவசியம். இதை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு டி.ஜி.பி. சுந்தரி நந்தா கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Helmets compulsory


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->