ஹெல்மட் கடையில அது இலவசமா கொடுக்கிறாங்களாம்பா.. சேலத்தில் வியப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறை ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. அதாவது, அந்தப் புதிய திட்டத்தின் கீழ் சுந்தர்ராஜ் மற்றும் அன்னதானபட்டி ஆகிய பகுதிகளில் ஹெல்மெட் சாலைகளாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், 'நோ ஹெல்மெட், நோ என்றி' என்ற புதிய திட்டமும் சேலம் மாநகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது சேலத்தில் இருக்கும் கோட்டை பகுதியில் ஹெல்மெட் கடை ஒன்று ஜம்ஜம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது.

சேலத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ஆனது 80 ரூபாய்க்கு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த சிரமத்தை குறைக்கும் பொருட்டு ஜம்ஜம் கடையில் ஹெல்மெட் வாங்கும் நபருக்கு ஒரு கிலோ வெங்காயத்தை பரிசாக உரிமையாளர் வழங்கி வருகின்றார்.

ஹெல்மெட்டின் ஆரம்ப விலை ரூபாய் 350 இல் இருந்து தொடங்கும் என்று கூறிய கடை உரிமையாளரின் புது வியாபார யுக்தியானது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

helmet shop announcement for free onion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->