காரிலும் ஹெல்மெட்டா.?! ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான தமிழக காவல் துறை.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி இருக்கின்றது. செல்வகுமார் நேற்று தன்னுடைய குடும்பத்துடன் பொங்கலூரில் இருந்து காரில் வீடு திரும்பியுள்ளார். 

அந்த நேரத்தில், திருப்பூர் போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து, அவருடைய செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. காரின் பதிவெண்ணை குறிப்பிட்டு, உங்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. இதன் காரணமாக ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது.  

மேலும், மெசேஜில் திருப்பூர் போக்குவரத்து காவல்துறை என்றும், இ-சலானில் தாராபுரம் காவல்துறை என்றும் குறிப்பிட்டு இருந்துள்ளது. கார் ஓட்டும் பொழுது பின்னால் அமர்ந்து இருப்பவர், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கா அபராதம்.?

அதுவும் எந்த காவல் துறை என சரியாக குறிப்பிடாமல் என செல்வகுமார் குழப்பத்தில் இருந்துள்ளார். மேலும், அவரது கார் என்னை மர்மநபர்கள் திருடி தவறாக பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் அவருக்கு இருப்பதாக கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HELMET FOR CAR IN TRIPPUR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->