43 குழந்தைகளுக்கு கொரோனா.. மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இங்குள்ள 4 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில், அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சோதனையில், காப்பகத்தில் தங்கியிருக்கும் குழந்தைகள் மற்றும் சிறார்கள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு சென்று சிறார்களை நேரில் சந்தித்தனர். 

இது தொடர்பாக அமைச்சரின் ட்விட்டர் பதிவில், " உத்திரமேரூரிலுள்ள காப்பகம் ஒன்றில் 43 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சற்று முன் PPE kit (Personal protective Equipment Kit) பாதுகாப்பு கவச உடை அணிந்து மருத்துவமனைக்குள் சென்று குழந்தைகளின் நலம் விசாரித்தோம் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Minister Visit at Kanchipuram GH Treatment 43 Children Positive Corona Virus 28 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->