நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது வரை நீட் தேர்வுகள் நடைமுறையில் உள்ளதால், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நீட் தேர்வுகள் வருவதற்கு யார் காரணம்? என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். எதிர்க்கட்சி துணைத்தலைவர் வேண்டும் என்றே திமுக மீது அவதூறு பரப்பி வருகிறார். 

நீட் தேர்வுகள் ஒத்திவைத்து அறிவிப்பு..!! - Seithipunal

திமுக அரசு நீட் தேர்வை இரத்து செய்ய தேவையான அனைத்தையும் செய்யும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கையையும் திமுக தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூறும் சில கருத்துக்கள் ஏற்கத்தக்கதல்ல. அவை அரசியல் ரீதியாக வீண் பழி சுமத்துவதே. 

தமிழகத்தில் தற்போது வரை நீட் தேர்வுகள் நடைமுறையில் உள்ளது. இதனால் மாணவர்கள் தொடர்ந்து நீட் தேர்வுக்காக தயாராக வேண்டியது அவசியமாகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Minister Says NEET 2021 Exam 18 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->