பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் அளித்து ஒருவாரம்: கண்டுகொள்ளாத தமிழக அரசு.! போராட்டத்தில் மாணவிகள்.! - Seithipunal
Seithipunal


கோவை :பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர் மீது புகார் அளித்து ஒரு வார காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு வார காலம் தாழ்த்தியதை கண்டித்து பள்ளி மாணவிகள், மாணவர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் ஆசிரியரை கைது செய்ய கோரியும், அவரை பணியிலிருந்து நீக்க சொல்லியும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வெள்ளலூர் பகுதிகள் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மாணவிகளிடம் தவறாக பேசுவதும், தவறாக நடந்து கொள்வதும், ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச குறுஞ்செய்தி உள்ளிட்டவைகள் அனுப்பியதாகவும் அந்த ஆசிரிர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், இன்று அந்த பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளை கலைந்து செல்லுமாறு ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harassment Issue School Student Protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->