சாலையில் இந்துக்கள் வரைந்த படத்தால் கைது.- 'காவல்துறை அத்துமீறல்' எச்.ராஜா ஆவேசம்.!  - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக தமிழகத்தில் இந்துக்கள் குறித்த சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாசபேச்சுகளைத் தொடர்ந்து, சேனல் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இதனால் அந்த ஆபாச தாக்குதலை செய்த சுரேந்தர் என்பவர் சரண்டர் ஆனார். பின்னர், அவர் பிணையில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் மீண்டும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தடைசெய்யப்பட்டது. 

இதன் பின்னர், தமிழகத்தில் கந்த சஷ்டி கவசத்திற்கு ஆதரவாகவும், கருப்பர் கூட்டம் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை பேசும் சிலரை எதிர்த்தும் தமிழக இந்துக்கள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அதுபோல சாலையில் முருகனின் வேலை வரைந்து வரைந்து அதில் வெற்றிவேல், வீரவேல் என்று எழுதியுள்ளனர். 

இதனால் காவல்துறை அவர்களை கைது செய்தது, குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கோவில்கள் முன்பாக இந்து விரோதி ஈ.வெ.ரா சிலைகள் இருக்கலாம். மதரசாவிற்கு எதிரில் சாலேயில் வேல் வரைந்து வெற்றிவேல் வீரவேல் என்று எழுதினால் கைதா. தமிழக காவல்துறை எல்லை மீறுகிறது. இது இந்துக்களுக்கு சவால்." என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H. Raja tweet about TN police 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->