இராமநாதபுரம் கொலை விவகாரம்.. என்.ஐ.ஏ விசாரணை கேட்கும் எச்.ராஜா...!! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வசந்த் நகர் கள்ளர் தெரு பகுதியை சார்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் அருண் பிரகாஷ் (வயது 22). இதே பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்பவரின் மகன் யோகேஸ்வரன் (வயது 23). இவர்கள் இருவரும் நண்பர்கள். அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன், திங்கட்கிழமை பிற்பகல் நேரத்தில் ஏ.டி.எம் மையத்தினை விட்டு வெளியே வருகையில், 9 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

பலத்த காயமடைந்த அருண் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இணையதள நெட்டிசன்கள் பதிவுப்படி, அருண் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் யோகேஷவ்ரன் விநாயகர் சதுர்த்தியை எடுத்து நடத்தியதும், இதனால் ஏற்பட்ட கோபத்தில் மாற்று மதத்தினர் கொடூர கொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

இதுமட்டுமல்லாது அம்மாவட்டத்தில் ஏற்கனவே இவர்களால் பல பிரச்சனை நடந்த போதிலும், சரிவர எடுக்கப்படாத நடவடிக்கையால் இன்று இத்துயர் அரங்கேறியுள்ளது என்றும், ஏற்கனவே அம்மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றிய வழக்கு மற்றும் பெண்களின் அலைபேசியை ஹேக்கிங் செய்தது போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளதும் இவர்கள் தான் என்றும் கூறுகின்றனர். 

மேலும், கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்த விதமான பாகுபாடும் இன்றி கடுமையான தண்டனைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, அருண் பிரகாஷின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ வசம் மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja Speech to NIA Investigation about Ramanathapuram Murder Case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->