பா.ரஞ்சித்திற்கு பாடம் புகட்ட இது தான் வழி.! எச்.ராஜா எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, "மக்களை தேர்தலில் திமுக கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்கு வராததால், மக்களுக்கு அவர்கள் ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர். 

தேசிய ஜனநாயக கூட்டணி வேலூர் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறது. கர்நாடக அரசியலில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தின் காரணமாக தற்போதைய அரசிற்கு எந்த விதமான பின்னடைவும் இருக்க போவதில்லை.

எடியூரப்பாவின் ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைக்கும் பெரும்பான்மையை போதுமானது. புதிய கல்விக்கொள்கை குறித்து பலரும் உள் நோக்கத்தோடு பேசி வருகின்றனர். இந்த புதிய கல்வி கொள்கையானது மலைவாழ் மக்கள் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இருக்கின்றது. இது முழுக்க, முழுக்க இந்த கல்வி கொள்கை கிராம மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தான் ஏற்படுத்தப்பட்டது. 

ரஞ்சித், சாதி வெறியன் ரஞ்சித், ரஞ்சித் இயக்குனர்,

இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் மலைவாழ் மக்கள், கிராம புற மக்கள் கல்வி அறிவு பெறுவதை எதிர்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க இருக்கின்றது.

மத்திய அரசு எதை செய்தாலும், சில அரசியல்வாதிகள் அதனை அரசியலுக்காக எதிர்க்கதான் செய்கிறார்கள். இயக்குனர் ரஞ்சித் எந்த ஆதாரமும் இல்லாமல் ராஜராஜ சோழன் குறித்து பேசியது சாதிய மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். சில மதமாற்றம் செய்யும் சக்திகளினால் கையாளாக பயன்படுத்தப்படுபவர் தான். ரஞ்சித் அவரது படங்களை புறக்கணித்து அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். " என அவர் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... l 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja speech about director ranjith speech about raja raja cholan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->