ஒயின்சாப் மட்டும் திறந்திருக்கு - கொந்தளிக்கும் எச்.ராஜா.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், தளர்வுகளுக்கு பின்னர் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் காரணமாக பல தளர்வுகளும், ஊரடங்கு தளர்வு கட்டுப்பாடுகளும் அமலில் இருக்கிறது. 

தமிழகத்தில் உள்ள சிறிய கோவில்கள் திறக்கவும், மக்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தில் விநாயகர் சிலையை மக்கள் வழிபட்டு, கரைப்பது வழக்கமான ஒன்று. 

இதனால் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்றும், கொரோனா பரவலுக்கு இது வித்திடும் வகையில் இருப்பதால், விநாயகர் சதுர்த்தி தினத்தில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " விநாயகர் சதுர்த்திக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பில் நியாயம் என்பது துளியளவும் இல்லை. 

தமிழகத்தில் உள்ள மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு, தினமும் ஒரு மதுபான கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எந்த விதமான சமூக இடைவெளியின்றி கூடி மதுபானம் வாங்கி செல்கின்றனர் " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja angry about Vinayagar Chathurthi Festival cancellation due to COVID19


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->