பட்டப்பகலில் பன்றி வேட்டை!! 8-ஆம் வகுப்பு மாணவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு!! - Seithipunal
Seithipunal



பெரம்பலூர் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சிறுவன் ஒருவன் படுகாயத்துடன் சிகிச்சைக்காக வந்துள்ளான். மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்ததில், சிறுவனின் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுவனின் முதுகில் இருந்த குண்டினை அகற்றி, மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்பு சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுவன் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் அய்யப்பன் என்பதும், அந்த ஊர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்பதும் தெரியவந்தது.

மேலும், சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவன் உட்பட மூவரும் பன்றி இறைச்சி விற்பனை செய்வதற்கு, பன்றி வாங்குவதற்காக  ஒரே மோட்டார் சைக்கிளில் மூவரும் சென்றபோது, திடீரென்று குண்டுவெடித்த சத்தம் கேட்டது. அப்போது அய்யப்பன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தான். அவன் முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தம் கொட்டியது. இதனையடுத்து அய்யப்பனை மருத்துவமனையில் சேர்த்தோம் என கூறினர். 

அவர்கள் கூறியதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் போலீசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அதில் தர்மலிங்கம், மணி, அய்யப்பன் ஆகியோர் பன்றி வேட்டைக்காக அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். 

அப்போது அவர்கள் பன்றியை சுட்டு பிடிப்பதற்காக நாட்டு துப்பாக்கியால்  பன்றியை நோக்கி சுட்டபோது, குறி தவறி குண்டு அய்யப்பன் முதுகில் பாய்ந்தது. இதனையடுத்து அய்யப்பனை மருத்துவமனையில் சேர்த்தது தெரியவந்தது.

இதனையடுத்து தர்மலிங்கம், மணி ஆகியோரை தொழுதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gun shoot on 8'th standard student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->