மருத்துவர் இராமதாசுக்கு கோடான கோடி நன்றிகள்.. குஜராத் வாழ் தமிழர்கள் நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


குஜராத் அகமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அப்பள்ளி மூடப்பட்டிருப்பது அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியாகி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அங்குள்ள தமிழ் மக்களும் பள்ளியின் முன்னர் போராட்டம் நடத்திய நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தமிழக முதல்வர் தலையிட்டு, குஜராத் முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய பிரதமர் மோடியும் இதனை கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக ட்விட் பதிவு மற்றும் அறிக்கைகள் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டது. பின்னர் மறுநாள் காலையில் முதல்வர் இது குறித்து குஜராத் மணிலா முதல்வருக்கு ட்விட் பதிவு செய்து, தொடர்பு கொண்டு பேசினார். இதனையடுத்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த விஷயத்திற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, குஜராத் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். மேலும், இது குறித்த வீடியோவில், தமிழ் மொழிக்காக போராடி வெற்றிபெற்று தந்த மருத்துவர் இராமதாஸிற்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Govt School Tamil issue girl student thanks to Dr Ramadoss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->