ஆட்கொல்லி ஆண் புலியை சுட்டு புடிக்க முடியாது - வனத்துறை விளக்கம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டார குடியிருப்புகளை ஒட்டிய‌ பகுதிகளில் யானை மற்றும் புலிகளின் நடமாட்டங்கள்‌ அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி, தற்போது மனிதர்களையும் வேட்டையாடி வருகிறது.

இந்த ஆண் புலிக்கு டி-23 என பெயரிடப்பட்டு இதனை புடிக்க வனத்துத்துறை அதிகாரிகள் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புலிகூடலூர் பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்றுள்ளது.

இந்த ஆட்கொல்லி புலியால் கிராம மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.  

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், "வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேடுதல், பொறி வைத்துப் பிடித்தல், அமைதிப் படுத்தல் நடவடிக்கைகள் பலன் தராத நிலையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய சூழலில் புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது" என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gudalur Tiger


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->