தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்டம்.. பச்சை மாவட்டமாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 938 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 687 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12,000 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 13,362 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,980 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக இருந்துவந்தது. அதை தொடர்ந்து அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 28 நாட்களுக்கு நாட்கள் புதிதாக வைரஸ் தொற்று இல்லாமல் ஈரோடு மாவட்டம் இருந்து வந்தது.ஆனால், தமிழகத்தில் பச்சை மண்டலம் இல்லாத மாநிலமாக மாறியது. 

இந்நிலையில்,  நேற்று திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலமாக மாறி உள்ளது. கடந்த 28 நாட்களில் அங்கு புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 144 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

green zone in erode


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->