மீண்டும் களம் காணுவோம் - அதிர வைக்கும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு : அரசு பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் தொடருமா..? - Seithipunal
Seithipunal


அரசு பள்ளி மாணவர்களின் கனவு தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் போராட்டத்தை துவக்கினோம்.

வேதனையோடு ஒத்தி வைக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு உறுப்பினருமான பாலமுருகன் கூறினார்.

திண்டுக்கலில் பேசிய அவர், இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தை வெறும் சம்பளத்திற்கான போராட்டம் என்று கொச்சைப்படுத்திவிட்டனர்.

இந்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது நம்மிடம் படிக்கும் சாதாரண ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலம். அந்த எதிர்காலத்திற்கான போராட்டமும் இதில் அடங்கியுள்ளது.

இனி வரும் காலங்களில் அரசு பள்ளியே இருக்காது. பொருளாதாரம் சார்ந்த விசயங்களுக்கு ஆலோசனை சொல்லும் மத்திய அரசின் நிதி ஆயுக் அமைப்பு, எந்தெந்த பள்ளிக்கூடங்கள் எல்லாம் சரியாக செயல்படவில்லையோ அந்த பள்ளிகளை தனியாருக்கே கொடுத்துவிடலாம் என்று கூறுகிறது.

சென்னை, திண்டுக்கல் வேடசந்தூர் உள்ளிட்ட பல நகரங்களில் நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளிகளை தனியாருக்கு கொடுக்கப் போகிறார்கள்.

அரசுப்பள்ளி மாணவர்களின் கனவுகள் தொலைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்று போராடுகிறோம்.

எங்கள் கோரிக்கையில் ஒரு கோரிக்கை கூட சம்பளம் பற்றியது இல்லை. பென்சன் திட்டத்தை பற்றி பேசுகிறோம். போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் நாம் களம் காணுவோம் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt workers strike again will continue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->