#BREAKING || பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உருமாறி உள்ள புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை வருகின்ற 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

மேலும், தமிழகத்தில் கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதேபோல், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சத்துணவு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் ஐந்து முட்டைகளையும் சேர்த்து வழங்க தமிழக அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு இந்த பொருட்களை வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOVT ORDER FOR TN SCHOOL


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->