பச்சிளம் குழந்தையின் உடலில் ஊசி.. அலட்சியத்தில் அரசு மருத்துவமனை.. கதறிய குளத்தை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை மரவனூர் இடைப்பட்டியை சார்ந்தவர் தாமரைச்செல்வி. இவரது கணவர் பிச்சாண்டவர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி தாமரைச்செல்வி அங்குள்ள மணப்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். 

இதன்பின்னர் குழந்தைக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட 5 நாட்களில் தம்பதிகள் இல்லத்திற்கு திரும்பிய நிலையில், தடுப்பூசி போட்ட இடத்தில் குழந்தைக்கு வெக்கம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது அவ்வப்போது காய்ச்சலும் ஏற்பட்டு வந்துள்ளது. 

குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே வந்த நிலையில், குழந்தையின் பாட்டி அமிர்ந்தவல்லி ஏப்ரல் 29 ஆம் தேதியன்று இரண்டாவது தடுப்பூசி போட அங்குள்ள மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று ஊசிபோட்டு, குழந்தையின் தொடை வீக்கம் குறித்து கேட்டுள்ளார். இதற்கு செவிலியர்கள் தரப்பில் ஐஸ்கட்டியை வைத்தால் சரியாகும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல குழந்தையை குளிக்க வைத்த சமயத்தில், குழந்தையின் தொடை பகுதியில் தடுப்பூசியின் பாகம் தென்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையின் பாட்டி ஊசியை பக்குவமாக வெளியே எடுத்த நிலையில், இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் அளித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt hospital foolish duty child body inject syringe at Trichy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->